யாஷிகா'வின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்த போலீசார்!

Update: 2021-07-27 01:00 GMT

நடிகை யாஷிகாவின் ஓட்டுனர் உரிமத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


நடிகை யஷிகா நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர்களுடன் சென்னையை நோக்கி காரில் வந்தபோது மகாபலிபுரம் அருகே சாலையில் தடுப்புச் சுவரில் அவரின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிகழ்விடத்திலேயே யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில் யாஷிகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் காரை தான் ஓட்டி வந்ததாக கூறியுள்ள யாஷிகா, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது என கூறியுள்ளார், இதனையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனராம்.

Similar News