ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் 'உப்பென்னா' நாயகி கீர்த்தி ஷெட்டி.
கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், கிரீத்தி ஷெட்டி மற்றும் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'உப்பென்னா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்ந ஒரு படம் மூலம் பிரபலமாகிவிட்டார் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இதனையடுத்து ஜீ தெலுங்கு தொலைக்காட்சி தயாரிப்புகளின் விளம்பர தூதராக க்ரீத்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளது.. இதற்காக அவருக்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.