நடிகர் கார்த்திக் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் கார்த்திக். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இன்னமும் கதாபாத்திரங்களில் முத்திரை பதிக்கும் விதமாக நடித்து வருகிறார். கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால் எழும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டதே காரணம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.