தனுஷன் ரோல்ஸ் ராய்ஸ் வரி விலக்கு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
நடிகர் தனுஷ் கடந்த 2018ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வணிக வரித்துறை ரூ. 60 லட்சத்து 66 ஆயிரம் நுழைவு வரிவிதித்தது. அதையடுத்து அந்த வரியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் தனுஷ். அதோடு, 50 சதவிகித வரியை செலுத்தினால் காரை பதிவு செய்யவும் வட்டார போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டிருந்தது வணிக வரித்துத்றை. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையின் போது தனுஷ் தரப்பில் யாரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 5'ம் தேதியான நாளை அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஏற்கனவே நடிகர் விஜய் இதுபோல தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரி அதனை நீதிமன்றம் புறக்கணித்தது குறிப்பிடதக்கது.