"அரசியல் அறிவு சத்தியமாக எனக்கு இல்லை" - முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த விஜய் சேதுபதி!
"அரசியல் அறிவு சத்தியமாக எனக்கு இல்லை" என நடிகர் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'லாபம்' படம் செப்டம்பர் 9'ல் தியேட்டரில் வெளியாகிறது. இது குறித்து பேட்டியளித்த விஜய் சேதுமதி கூறியதாவது, "லாபம்' படம் விவசாயத்திற்கு பின்னால் உள்ள பொருளாதார அரசியலை அவர் பாணியில் வெளிப்படுத்தியுள்ளார். விவசாயத்தை நாம் பார்க்காத புதிய கோணத்தில், ஜனநாதன் பார்த்த கோணத்தில் படத்தை பார்க்கலாம்" என்றார். மேலும், "அரசியல் போறதுக்கு அறிவு வேண்டும். அந்த அறிவு சத்தியமாக எனக்கு இல்லை" இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வாரம் ஒரு தனியார் யூ ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியது குறிப்பிடதக்கது.