வலிமை படத்தின் முன்னோட்ட காட்சிகள் நேற்று வெளியாகி இணையத்தை தெறிக்க விடுகிறது.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அதன் முன்னோட்ட காட்சிகள் வெளியாகின.
அதில், மயிர்கூச்செரிய செய்யும் பைக் சாகசங்கள், கூர்மையான கேமரா கோணங்கள், வில்லன் கார்த்திகேயா மற்றும் நாயகன் அஜித் அவர்களின் பஞ்ச் வசனம் இடம்பெற்று இணையத்தில் வைரலாக வந்துகொண்டிருக்கிறது.
"நான் கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி" என அஜித் பேசும் வசனம் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் கூடியுள்ளது.