நடிகை சமந்தா, நாக சைதன்யா ஜோடியின் விவாகரத்து தொடர்பாக ஜீவனாம்சம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சமந்தா தற்போது நாக சைதன்யாவுடன் இல்லை என்றும், 4 மாதங்களாகவே தனியாகத்தான் வசித்து வருகிறார் என்றும், இருவரும் விவாகரத்துக்கு தயாராகி உள்ளனர் என்றும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், விவாகரத்து பெறும்பட்சத்தில் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா ரூ.50 கோடி வரை கொடுக்க சம்மதித்து உள்ளதாக ஒரு தெலுங்கு இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. சமந்தா திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் பாரம்பர்யமிக்க நாகர்ஜுனா குடும்பத்திற்கு ஈடுபாடு இல்லை என்பதே காரணம் என கூறப்படுகிறது.