'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரையரங்குகளில் வராதா?

Update: 2021-10-01 10:45 GMT

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெளியீடு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.




 


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.




 


இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் கிடைத்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளிவராமல் ஓ.டி.டி'யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News