சூப்பர் ஸ்டாருக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் - மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
அக்டோபர் 4'ம் தேதி அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்பல இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவர் பாடும் 'ஓப்பனிங் சாங்' எனப்படும் படத்தின் முதல் பாடல் மிகப்பிரபலமாகும். சூப்பர் ஸ்டாரின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகிகள் என பலர் மாறினாலும் முதல் பாடல் எஸ்.பி.பி வசம் செல்வதையே ரஜினி விரும்புவார். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களும் அவ்வாறே. கடந்த ஆண்டு கொரோனோ பாதிப்பு காரணமாக எஸ்.பி.பி இறந்து ஒரு வருடம் ஆகிறது.
இந்ந நிலையில் எஸ்.பி.பி கடைசியாக சூப்பர் ஸ்டாருக்கு அண்ணாத்த படத்திற்காக பாடிய பாடல் வரும் 4'ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் இதுவரை இல்லாத ஆவலுடன் காத்துள்ளனர்.