ஹிந்தி சினிமா'வில் அடியெடுத்து வைக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
தமிழில் 3 படம் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். தற்பொழுது தெலுங்கிலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறார். இவரின் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில் இவரின் ஹிந்தி முதல் படமாக தெலுங்கில் கடந்த 2019-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'ஜெர்ஸி' படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் ஹிந்தியில் காலடி எடுத்து வைக்கிறார் அனிருத்.