நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் உடல் தானம் செய்துள்ளார்.
ரோபோ சங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவரை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெறுவது ரோபோ சங்கரின் வழக்கம். ஏற்கனவே கமல்ஹாசன் உடல்தானம் செய்துள்ளார்.
இந்நிலையில் தனது ஆதர்ச நாயகன் கமலை பின்பற்றி நடிகர் ரோபோ ஷங்கரும் உடல்தானம் செய்துள்ளார். இதனை வரும் நவம்பர் 7'ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று அவரை நேரில் சந்தித்து முழு உடல் தானத்திற்காக சான்றிதழை காண்பிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.