நீதிபதி என் மனதை புண்படுத்திவிட்டார் - விஜய்

Update: 2021-10-25 10:45 GMT

கொகுசு கார் இறக்குமதிக்கான வரிவிலக்கு தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் கருத்து தன் மனதை புண்படுத்தி விட்டதாக நடிகர் விஜய் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 


விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். வாகன பதிவுக்காக, மண்டல போக்குவரத்து அதிகாரியிடம் நுழைவு வரி தொடர்பாக, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும்படி, போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார். இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தும் பட்சத்தில், சான்றிதழ் வழங்குவதாக உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நுழைவுவரியில் இருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‛‛நடிகர்கள் வரி விலக்கு கோருவை ஏற்க முடியாது. சாதாரண மக்கள் வரி கட்டும் நடிகர்கள் வரி விலக்கு கேட்பது ஏன். நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு என கடுமையாக விமர்சித்து இருந்தார்.




 


இது தொடர்பாக விஜய் தரப்பு நீதிமன்றத்தில், "இந்த வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தி உள்ளன. கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கிய நிலையில் நீதியின் விமர்சனம் தேவையற்றது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News