சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் , சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.
இப்படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்தில் இருந்து நான்கு பாடல்கள் வெளியாகியுள்ளது, சமீபத்தில் டீசரும் இப்படத்தில் இருந்து வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.