பீம்லா நாயக் படத்தின் இறுதிகட்ட காட்சி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வருகிறது பீம்லா நாயக். இதில் பவன் கல்யாணும், ராணாவும் நடிக்க சாஹர் சந்திரா இயக்கி வருகிறார்.
தற்பொழுது தெலுங்கு ரீமேக்கிற்காக பரபரப்பான சண்டைக்காட்சியில் பவன் கல்யாணும் ரானாவும் நடிக்க கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது. சண்டைக்காட்சி இடைவேளையின்போது கயிற்று கட்டிலில் பவன் கல்யாணும் மாட்டுவண்டியில் ராணாவும் படுததபடி ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.