கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய விக்ரமின் 'மகான்' திரைப்படம் ஓ.டி.டி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
நடிகர் விக்ரமின் 60'வது படம் 'மகான்'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'மகான்' திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி'யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.