சிம்பு'வின் பத்து தல படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பத்து தல', இப்படத்தில் நடிக்கும் பிரியாபவானிசங்கர் தற்பொழுது கன்னியாகுமாரி நகரில் படப்பிடிப்பில் இருப்பதை உறுதி செய்துள்ளார்.
இதனை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில், "கன்னியாகுமரியில் ஒரு வாரமாக 'பத்து தல' படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். இங்கு படப்பிடிப்பு நடப்பதில் மகிழ்ச்சி. மிக அற்புதமான ஒரு நகரத்தில் இருக்கிறேன். மக்கள், வானிலை, உணவு, ஊரின் அமைதி எப்போதும் என இதயத்தில் இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.