உலகநாயகனின் பிறந்தநாளை கொண்டாடிய 'விக்ரம்' குழுவினர் !

Update: 2021-11-02 09:45 GMT

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னரே துவக்கிய 'விக்ரம்' படக்குழுவினர்.




 


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'. மேலும் பல கதாபாத்திரங்களாக அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.




 


வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. வரும் நவம்பர் 7'ம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாளாகும் ஆனால் படக்குழுவினர் முன்னரே அவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் படக்குழுவினர் அனைவரும் இடம் பெற்றிருந்தனர்.

Similar News