'எனிமி'க்காக ஏழுமலையானை நடந்தே சென்று தரிசித்த விஷால்

Update: 2021-11-03 10:45 GMT

'எனிமி'யை காப்பாற்றுங்கள் ஏழுமலையானே' என நடிகர் விஷால் தீபாவளிக்கு வெளியாகும் தன் படத்திற்காக திருப்பதி நடந்து சென்று வணங்கியுள்ளார்.




 


இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எனிமி. தீபாவளிக்கு சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' படத்துடன் வெளியாகிறது.




 


இந்நிலையில் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் விஷால். அவருடன் அவரது நண்பரும், நடிகருமான ரமணாவும் உடன் சென்றார். படம் வெளியாக சமயத்தில் வேண்டுதலுக்காக விஷால் திருப்பதி சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Similar News