மலையாளத்தில் சொந்தமாக படம் தயாரிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார். தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் 'சர்காரு வாரி பாட்ட சுரு', மோகன் லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார். 'வாஷி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்கவிருக்கிறார்.