பெண் கிரிக்கெட் வீராங்கணை மிதாலி ராஜ்'ன் பயோபிக்'ல் டாப்சி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம் 'சபாஷ் மிது', வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இது பற்றி நடிகை டாப்ஸி கூறுகையில், ‛‛எனக்கு 8 வயது இருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் ஆண்களுக்கான விளையாட்டாக இருக்காது, நமக்கென்று ஒரு அணியும், ஒரு அடையாளமும் கூட கிடைக்கும் என்று ஒருவர் என்னிடம் கூறினார். அது இப்போது நடத்திருக்கிறது. நாங்கள் விரைவில் வருகிறோம். சபாஷ் மிதுபடப்பிடிப்பு நிறைவடைந்தது" என கூறியுள்ளார்.