ஓ.டி.டி'க்கு செல்கிறது சாணிக்காயிதம்

Update: 2021-11-13 10:45 GMT

இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள 'சாணிக்காயிதம்' படம் ஓ.டி.டி'யில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.




 


இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் சாணிக்காயிதம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த ஆகஸ்டு மாதமே தனக்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டார் செல்வ ராகவன். ஆனால் கொரோனோ ஊரடங்கு, திரையரங்குகள் கிடைப்பதில் தாமதம் போன்ற பல காரணங்களினால் படம் வெளியாவது தள்ளிபோகிக்கொண்டே இருந்தது.




 


இந்நிலையில் சாணிக்காயிதம் படத்தை தயாரித்துள்ள நிறுவனம் ஓ.டி.டி தளத்தில் வெளியிட பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Similar News