வாலி, மங்காத்தா போன்று மீண்டும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் !

Update: 2021-11-16 09:30 GMT

வாலி, மங்காத்தா போன்று மீண்டும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித்.




 


இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்திலும் நடித்துள்ளார் அஜித். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதால் ரசிகர்களிடையே மீண்டும் எதிர்பார்ப்புகள் அதிகம் நிலவி வருகின்றன.




 


இந்நிலையில் மீண்டும் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார், இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி விட்டார் வினோத். இந்நிலையில் இந்த படத்தில் அஜித் நெகடீவ் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாலி, மங்காத்தா போன்ற படங்களில் நெகட்டிவ் கலந்த வேடங்களில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News