டைம்ஸ் சதுக்கத்தில் நம் இசைஞானி இளையராஜா !

Update: 2021-11-20 10:45 GMT

நமது இசைஞானி இளையராஜா அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வீடியோ வடிவில் ஒளிபரப்பாகி புகழ்பெற்றுள்ளார்.




 


இந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது பாடல்கள் ஸ்பாட்டிபை என்ற ஆப்பில் கிடைக்கிறது. இதுதொடர்பான விளம்பரங்களிலும் இளையராஜா தோன்றி உள்ளார்.




 


இந்நிலையில் முதன்முறையாக இளையராஜாவின் பேனர் அடங்கிய வீடியோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தின் உயரமான கட்டட திரையில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டது. இதை இளையராஜாவின் உலகளவிலான ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Similar News