ஐதராபாத்'தில் பிரம்மாண்ட அரங்கில் ராம்சரண் பாடல் காட்சியை படமாக்கும் ஷங்கர் !
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தற்பொழுது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஷங்கர் இயக்கி ராம்சரண், கியாரா அத்வாணி நடித்து வரும் பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு புனேயில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தமனின் இசையில் உருவான டூயட் பாடல் ஒன்று தற்போது பிரமாண்ட செட் பின்னணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவான இந்த அரங்கில் உருவாகும் ரூயட் பாடல் திரையுலக ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக பேசப்படும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.