ஆருயிர் நண்பன் கமல்ஹாசனை நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

Update: 2021-11-23 10:15 GMT

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் நலம் விசாரித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.




 


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில், லேசான இருமல் இருந்ததால், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைதொடர்ந்து கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




 


இந்நிலையில் இன்றைய தினம் ரஜினிகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனுக்கு போன் செய்து விசாரித்துள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Similar News