ராஜமௌலி படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.
பொதுவாக இயக்குனர் ராஜமௌலி படத்தில் வில்லனாக நான் ஈ சுதீப், பாகுபலி ராணா என ஹீரோக்களே விரும்பி நடிப்பார்கள். அந்த வரிசையில் மகேஷ் பாபு நடிக்க தன் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர் ராஜமௌலி அப்படத்தில் ஒரு வலிமையான வில்லானக விக்ரமை நடிக்க வைக்க ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது ஓர் பான் இந்தியா படமாக உருவாகிறது என்பது குறிப்பிடதக்கது.