கடைசி விவசாயி படக்குழு மீது இளையராஜா கோபம் !

Update: 2021-12-02 14:30 GMT

'கடைசி விவசாயி' படக்குழு மீது சங்கத்தில் புகாரளித்த இசைஞானி இளையராஜா.

காக்கா முட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படம் தேசிய விருதை வென்றது. பின்னர் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் டைரக்டு செய்தார். தற்போது விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி உள்ளார்.




 


படத்திற்காக இளையராஜா இசையமைத்து வந்ந நிலையில், படக்குழுவினருக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்து படத்தை முடித்துவிட்டனர்.




 


இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து இளையராஜா இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இளையராஜா தனக்கு தெரிவிக்கப்படாமல் இது நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

Similar News