தெலுங்கு திரையுலகில் மழைபாதிப்பு நிவாரணத்தை வாரி வழங்கும் ஹீரோக்கள் !

Update: 2021-12-03 00:30 GMT

ஆந்திரா, தெலுங்கானா மழை பாதிப்பிற்கு தெலுங்கு கதாநாயகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு நிவாரணத்தை வாரி வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த கன மழை ஆந்திர மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 30 பேருக்கு மேல் உயிர்பலி ஆகியிருக்கிறார்கள். தெலுங்கு ஹீரோக்கள் வெள்ள நிவாரண உதவிகளை போட்டி போட்டு அறிவித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாவும் தலா 25 லட்சம் அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து பல நடிகர்கள் தங்களால் இயன்ற அளவு நிவாரண தொகையை அறிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News