ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் பான் இந்தியா படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 5 மொழிகளில் முதற்கட்டமாக வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் தேதி கடந்த இருமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை புதிய டிரைலர் தேதியாக டிசம்பர் 9'ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.