மலையாள இயக்குனர் ரெஜிஷ் மதிலா தன்னை கவர்ந்த யோகிபாபு'வை கதாநாயகனாக வைத்து தமிழில் ஒரு படம் இயக்குகிறார்.
தமிழில் தற்பொழுதைய முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு, பல படங்களில் காமெடி வேடங்களிலும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள இயக்குனர் ரெஜிஷ் மதிலா'விற்கு யோகிபாபுவின் நடிப்பு பிடித்துபோகவே யோகிபாபுவிற்காக பேண்டஸி கதை ஒன்றை தயார் செய்து கூறியுள்ளார். உடனே யோகிபாபுவும் சம்மதிக்க பட வேலைகளை துவங்கிவிட்டனர்.
இப்படத்தினு படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் நேற்று (டிசம்பர் 7) துவங்கியது. பரத் சங்கர் இசையமைக்க, கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார். தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். 2022'ல் படம் வெளியாகும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.