தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விக்ரமிற்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனோ இரண்டாம் அலை முடிந்தாலும் தொற்று பரவுவது இன்னும் குறையவில்லை, அந்தவகையில் நடிகர் விக்ரமிற்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விக்ரம் தற்பொழுது பொன்னியின் செல்வன், மகான் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் கோப்ரா படப்பிடிப்பில் பங்குபெற்று வந்தார்.
விக்ரமிற்கு மேற்கொண்ட பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயின் தாக்கம் குறைவு என்பதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார்.