'ஜலபுலஜங்கு' பாடல் செய்த மாயாஜாலம்

Update: 2021-12-18 02:00 GMT

டான் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஜலபுலஜங்கு' யூ ட்யூப் தளத்தில் வைரலாகி வருகிறது.




 


இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா ,சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டான்', டாக்டர் வெற்றிக்கு பிறகு வெளிவரும் சிவகார்த்திகேயன் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றனது.




 


இந்நிலையில் 'டான்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஜலபுலஜங்கு' பாடல் நேற்று முன்தினம் யூ ட்யூப் தளத்தில் வெளியாகியது. வெளியான 24 மணி நேர இடைவெளியில் 23 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது 'ஜலபுலஜங்கு' பாடல். மேலும் பல பார்வையாளர்களை இப்பாடல் ஈர்த்துக்கொண்டு வருகிறது.

Similar News