''புஷ்பா' படத்தில் இடம்பெற்ற ஆபாச காட்சி நீக்கப்பட்டது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளிவந்துள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா இடையிலான காதல் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அது பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாசமாக இருப்பதாக கருத்துக்கள் எழுந்தன.
திரையரங்கு உரிமையாளர்களும் குடும்பத்துடன் வரும் ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்ததால் அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கிவிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.