முதல் தெலுங்கு படத்தில் "வாத்தியாராக" களமிறங்கும் தனுஷ்!

Update: 2021-12-23 09:45 GMT

இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தெலுங்கில் வாத்தியாராக அவதாரம் எடுக்கவுள்ளார் தனுஷ்.




 


பான் இந்திய அளவில் இன்று பரபரப்பாக நடித்து கொண்டிருக்கும் தமிழ் திரையுலகை சார்ந்த நடிகர் என்றால் அது தனுஷ் மட்டுமே, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பரபரப்பாக படங்களில் இயங்கி கொண்டிருக்கிறார்.




 


இந்நிலையில் முதன் முறையாக நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க தனுஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தெலுங்கில் "சார்" தமிழில் "வாத்தியார்" எனும் தலைப்பில் படத்தை துவக்கவுள்ளார். அதற்கான அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் தனுஷ் தெலுங்கில் துவங்க இருப்பது குறிப்பிடதக்கது.

Similar News