பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வந்த இசைஞானி இளையராஜா 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் தயாரிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் "அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா, சிங்காரவேலன்" என பல படங்களை தயாரித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இவர் படங்களை தயாரிக்கவில்லை.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்குனராக பால்கி இயக்கும் புதிய படத்தை இசைஞானி இளையராஜா தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.