ஒரு பில்லியன் டாலர் வசூலை கடந்து சாதனை படைத்த 'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்'!
2021'ம் ஆண்டில் அதிக வசூல் வேட்டை 'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்' படம் நிகழ்த்தியுள்ளது.
சோனி மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார் தயாரித்த படம் 'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்', கடந்த கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ஒரு பில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் 220 கோடி வசூலை கடந்துள்ளது.
ஒரு பில்லியன் டாலர் என்பது அமெரிக்க நாணயத்தின் மதிப்பு படி 7492 கோடி ரூபாய். 'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்' திரைப்படம் இந்திய மதிப்பு படி 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரான படம் என்பது குறிப்பிடதக்கது. இதுவரை 6000 கோடி ரூபாய் தயாரிப்பு செலவை விட கூடுதலாக வசூலித்துள்ளது.