ஹிப்ஹாப் ஆதிக்காக பாடிய இரு பெரும் இசையமைப்பாளர்கள்

Update: 2021-12-30 00:30 GMT

ஹிப்ஹாப் ஆதியின் 'அன்பறிவு' படத்தில் இரு பெரும் இசையமைப்பாளர்கள் பாடல் பாடவுள்ளனர்.




 


இயக்குனர் அஷ்வின்ராம் இயக்கியக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம் 'அன்பறிவு', ஷிவானி ராஜசேகர், காஷ்மீரா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இப்படம் வரும் ஜனவரி 7'ம் தேதி ஓ.டி.டி'யில் வெளியாக உள்ளது.




 


இப்படத்தின் முக்கிய இரு பாடல்களை இரு பெரும் இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் ஹிப்ஹாப் ஆதிக்காக பாடியுள்ளனர். இதனால் பெரும் மகிழ்ச்சியாக உள்ளார் ஆதி. ரசிகர்களிடத்தில் படம் வெளியான பிறகு இப்பாடல்கள் கண்டிப்பாக வெற்றி பெரும் என நம்புகின்றனர் படக்குழுவினர்.

Similar News