பிரபலங்கள் புடைசூழ தன் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகர் யோகிபாபு.
தமிழ் திரையுலகில் தற்பொழுது முன்னணி காமெடி நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் யோகி பாபு, இவரின் தேதி கிடைக்காமல் பல படங்கள் முடங்கியுள்ளன தற்பொழுது. கடந்த ஆண்டுதான் இவருக்கு திருமணம் ஆனது.
இந்நிலையில் இன்று தனது மகனின் முதல் பிறந்தநாளை பிரபலங்கள் புடைசூழ கொண்டாடினார். இதில் சுந்தர்.சி, உதயநிநி, மாரி செல்வராஜ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தீவிர முருக பக்தரான யோகி பாபு தன் மகனுக்கு 'விசாகன்' என பெயர் சூட்டியுள்ளார்.