படத்திற்கு இணையான உழைப்பை ப்ரோமோ நிகழ்ச்சிக்கு தரும் இயக்குனர் ராஜமௌலி !
தனது படைப்பான ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இணையான உழைப்பை படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு கொடுத்து வருகிறார் இயக்குனர் ராஜமௌலி.
இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பாக, பான் இந்தியா படமாக வெளிவருகிறது ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவருக்கும் இது கனவு படைப்பாகும். இப்படி மிகுந்த எதிர்பார்ப்புடன், பொருட்செலவுடன் படத்தை உருவாக்க கிட்டதட்ட 4 ஆண்டுகக் படக்குழு உழைத்து வந்தது.
தற்பொழுது படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்தியா முழுவதுத் படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சிகளில் இயக்குனர் ராஜமௌலி மிகவும் மெனக்கெட்டு வருகிறார். உதாரணமாக சென்னையில் பிரம்மாண்ட அரங்கில் மூன்று மணி நேர நிகழ்ச்சியாக ஆர்.ஆர்.ஆர் பட ப்ரோமோ'வை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதியை வைத்து கோலாகலமாக நிகழ்த்தி காட்டினார். இப்படி இந்தியாவின் முன்னணி நகரங்களில் படக்குழுவினர் பயணித்து வருகின்றனர். படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சி பட்ஜெட் மட்டும் 20 கோடி என தகவல் கிடைத்துள்ளது.