'குருதி ஆட்டம்' படத்திற்கு தடை கோரி வழக்கு

Update: 2021-12-30 12:00 GMT

அதர்வா'வின் குருதி ஆட்டம் படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.




 


இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான படம் 'குருதி ஆட்டம்', படம் தயாராகி நீண்டநாட்களாக வெளிவராமல் இருந்துவந்தது. இந்நிலையில் இப்படம் வெளிவருவதற்கு தயாரிப்பு தரப்பு முயற்சித்து வந்த நிலையில் இப்படத்தை தடை செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.




 


ப்ளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் தயாரிப்பு நிறுவனம் இப்படத்திற்கான தடையை விதிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News