"விஜய்'யை வைத்து படம் பண்ணுவேன்" புஷ்பா இயக்குனர் சுகுமார் கூறும் சீக்ரெட் !
"'ரங்கஸ்தலம்' விஜய்'க்கு ரொம்ப பிடித்த படம், வாய்ப்பு கிடைத்தால் விஜய் அவர்களை வைத்து இயக்குவேன்" என புஷ்பா பட இயக்குனர் சுகுமார் கூறியுள்ளார்.
சமீபத்தில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் புஷ்பா, இதன் இயக்குனர் சுகுமார் ஆர்யா, ஆர்யா 2, ரங்கஸ்தலம் என தெலுங்கு திரையுலகின் மோஸ்ட் வாண்டட் ஹிட் இயக்குனர். இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "புஷ்பா கதையை 2015'ம் ஆண்டிலிருந்து தேடிப்படித்து தயாரிக்க ஆரமிச்சேன், பின் அல்லு அர்ஜுன் அவர்களிடம் சொல்ல மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்து கொண்டார் அப்படி துவங்கியதுதான் புஷ்பா" என்றார்.
மேலும், "சுகுமார் என்ற பெயரை கேட்டவுடன் எல்லோருமே தமிழ்நாட்டை சார்ந்த ஆள் என நினைத்து விடுவார்கள் ஆனால் நான் ஆந்திரத்தை சேர்ந்தவன், ரங்கஸ்தலம் பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மூலமாக விஜய் சார் என்னை சந்திக்க வேண்டும் என கூறினார் அதன்பிறகு வாய்ப்பு அமையவில்லை, ஆனால் வாய்ப்பு கிடைத்தால் விஜய் அவர்களை வைத்து படம் இயக்குவேன்" என கூறியுள்ளார்.