தனுஷின் 'வாத்தி'யை துவக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர்

Update: 2022-01-03 12:15 GMT

தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் இன்று துவங்கி வைத்தார்.




 


நடிகர் தனுஷ் தற்பொழுது மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் முதன்லமுறையாக நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக சில நாட்கள் முன்பு அறிவித்தார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். 'வாத்தி' என பெயரிடப்பட்ட இப்படத்தில் தனுஷின் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கவிருக்கிறார்.




 


இன்று ஐதராபாத்'தில் 'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பிரபர இயக்குனர் திரி விக்ரம் சீனிவாஸ் க்ளாப் போர்ட் அடித்து துவங்கி வைத்தார். தளத்தில் முறையான படப்பிடிப்பு ஜனவரி 5'ல் துவங்குகிறது.

Similar News