'வாத்தி' தன் பாடத்தை இன்று முதல் துவங்கினார்

Update: 2022-01-07 11:00 GMT

'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு துவங்கினார் நடிகர் தனுஷ்.




 


தற்பொழுது 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து வரும் தனுஷ் முதன் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது.




 


கடந்த வாரம் படத்தின் துவக்கத்தை பூஜையுடன் துவங்கிய தனுஷ் இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளார். லேசான தாடியுடன், மடித்து விடப்பட்ட அரைக்கை சட்டையுடன், ஃபார்மல் லுக்'குடன் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Similar News