சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - இனி டாக்டர்.சிலம்பரசன்

Update: 2022-01-09 03:15 GMT

நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது.




 


இயக்குனர் டி.ராஜேந்தர் மகனும் பிரபல நடிகருமான சிம்பு என்கிற சிலம்பரசன் சிறு வயது முதல் திரையுலகில் நடித்து வருகிறார். கிட்டதட்ட 35 ஆண்டுகளாக படத்தில் நடித்து வரும் சிலம்பரசன் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராவார். இவர் நடிகராக மட்டுமின்றி, திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல துறைகளில் திரையுலகில் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் வெளியான இவரின் 'மாநாடு' படம் கடந்த 2021'ம் ஆண்டில் வெளியாகிய படங்களில் முக்கியமானதாகும். மிகுந்த வெற்றியையும் பெற்றது.




 


இந்நிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 11'ம் தேதி சிலம்பரசன் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Similar News