ஆ! மம்முட்டியின் நண்பர்களா இது? - வயதான நண்பர்கள் மத்தியில் யூத்தாக ஜொலிக்கும் மம்முட்டி

Update: 2022-01-09 03:00 GMT

கல்லூரியில் படித்த நண்பர்களுடன் இனிய சந்திப்பை நிகழ்த்தியுள்ளார் மலையாள நடிகர் மம்முட்டி.




 


மலையாள திரையுலகில் முன்னனி கதாநாயகனாக கடந்த 40 ஆண்டுகளாக வலம் வருபவர் மம்முட்டி. தமிழிலும் இவர் நடித்த படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளன. 5 முறை தேசிய விருதுகளை வாங்கிய முக்கியமான தென்னிந்திய நடிகர் இவர். 70 வயதான மம்முட்டி படித்தது எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ.




 


தன்னுடன் படித்த சக நண்பர்களை சந்தித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் மம்முட்டி. 70 வயதான இவர் மற்ற நண்பர்கள் வயதானவர்களாக தோற்றமளிக்க மம்முட்டி மட்டும் இளமையாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தற்பொழுதைய இளம் நடிகர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடதக்கது.

Similar News