'வலிமை' படத்தில் 'கடவுள்' பற்றிய சர்ச்சை வசனம் - தணிக்கக்குழு அதிரடி நடவடிக்கை

Update: 2022-01-09 03:00 GMT

கடவுள் பற்றிய சர்ச்சை வசனத்தை 'வலிமை' படத்தில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது தணிக்கைக்குழு.




 


இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் அஜித்குமாரின் 'வலிமை' கொரோனோ காரணமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட வலிமை படத்தின் தணிக்கை முடிந்துள்ளது. தணிக்கை குழுவினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இப்படத்தில் சில குறிப்பிட்ட காட்சிகளை திருத்த தணிக்கைக்குழு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




 


அதில், விலங்குகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படவும், படம் முடிந்தவுடன் வரும் டூட்டில் கார்ட் தமிழில் இடம் பெறவும், போதை பொருள் பயன்படுத்தும் இடங்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறவும், சண்டை காட்சியில் அடிபடும் நபரின் ரத்தம் மறைக்கப்பட வேண்டும் எனவும், கத்தியால் குத்துதல் போன்ற வன்முறை காட்சிகள் மறைக்கப்பட வேண்டும் எனவும், வழக்கத்திற்கு மாறான தவறான வார்த்தைகள் தவிர்க்கவும், நடுவிரல் காண்பிக்கும் காட்சிகள் நீக்கவும், முக்கியமா 'கடவுள்'தான் நிஜ சாத்தான்' என்ற வார்த்தை நீக்கப்பட வேண்டும் எனவும் சில குறிப்பிட்ட இடங்களில் தணிக்கைக்குழு மாற்ற பரிந்துரைத்துள்ளது. படம் வெளியாகும் போது இவை அனைத்திலும் கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

Similar News