"'புஷ்பா' படத்தில் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கு நான் அடிமையாகிவிட்டேன்" என பிரபல இயக்குனர் செல்வராகவன் 'புஷ்பா' படத்தை பாராட்டியுள்ளார்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள படம் 'புஷ்பா'. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், சுனில் போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. இதுவரை 40 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் பற்றி குறிப்பிட்ட இயக்குனர் செல்வராகவன், "வாவ், சூப்பர் திரைப்படம் இப்படத்தின் பின்னணி இசைக்கும், பாடல்களுக்கும் நான் அடிமையாகிவிட்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.