நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 2'ம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் 'பீஸ்ட்' வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் இதுவரை வெளியாகவில்லை என இணையதளத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். பட வெளியீட்டுக்கு இன்னும் சரியாக 15 நாட்களே இருக்கும் நிலையில் எப்போது ட்ரெய்லர் வெளியிடுவார்கள் என்று பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 2'ஆம் தேதி மாலை 6 மணி அளவில் விஜய் நடிப்பில் தயாரான இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் நேற்று முதலே சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.