கொமரம் பீமின் சொந்த ஊரில் பொதுமக்களுடன் ஆர்.ஆர்.ஆர். படத்தை ரசித்த ராஜமௌலி

Update: 2022-04-14 09:06 GMT

ஆர்.ஆர்.ஆர் படத்தில் பீம் என்கிற கதாபாத்திரம் உருவாக காரணமாக இருந்தவர் 'கொமரம் பீம்', இவரின் சொந்த ஊரான ஆசிபாபாத்'தில் ரசிகர்களுடன் அமர்ந்து இயக்குனர் ராஜமவுலி ஆர்.ஆர்.ஆர் படம் பார்த்துள்ளார்.





இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தை சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நடக்கும் கதைக்களமாக அமைத்த ராஜமவுலி குறிப்பாக 'பீம்' என்கின்ற கதாபாத்திரத்தை ஜூனியர் என்.டி.ஆர் அவர்களை நடிக வைத்து வடிவமைத்திருந்தார். இதில் வரும் 'பீம்' என்கின்ற கதாபாத்திரம் சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து புரட்சி செய்த நிஜ கதாபாத்திரம் ஆகும்.





மேலும் இந்த படம் உருவாக ஆரம்பித்த காலத்திலிருந்து கொமரம் பீம் சொந்த ஊரான 'ஆசிபாபாத்' பகுதி பிரபலமாக மாறத் துவங்கியது, அங்கே 'கொமரம் பீம் மாவட்டம்' என்கிற பெயரில் ஒரு புதிய ஏரியாவே உருவாகி உள்ளது. தற்போது அங்கு உள்ள திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது, அங்கு தன் மனைவியுடன் சென்ற இயக்குனர் ராஜமௌலி அங்கிருந்த கே.பி திரையரங்கில் கொமரம் பீம் பகுதி மக்களுடன் கலந்து படத்தை பார்த்து ரசித்தார்.

Tags:    

Similar News