ராம்சரணுடன் புகைப்படம் எடுக்க போட்டி போட்ட பஞ்சாப் போலீசார்

Update: 2022-04-19 06:45 GMT

பஞ்சாபில் படப்பிடிப்பில் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த போலீசார் ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வளம் வருகின்றன.




சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மூலம் ராம்சரண் இந்திய அளவில் பிரபலமான கதாநாயகன் ஆகிவிட்டார், குறிப்பாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த காரணத்தினால் இளம் போலீசார் மத்தியில் ராம் சரணுக்கு ரசிகர்கள் வட்டம் கூடியுள்ளது. தற்பொழுது படப்பிடிப்பிற்காக பஞ்சாபில் முகாமிட்டுள்ள ராம்சரண் அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த காவல் துறையினர் மத்தியில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.




தளத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட பஞ்சாப் போலீசார் ஆர்வமுடன் புகைப்படங்களும், செல்பியும் ராம்சரணுடன் எடுத்துக்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் அப்பகுதியில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த சென்ற இளம் பெண்கள் ராம்சரணுடன் செல்பி எடுக்க முண்டியடித்த நிலையில் கூட்டம் அதிகமாகி போலீசார் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தென்னிந்திய அளவில் நடித்து வரும் ஹீரோக்கள் தற்போது இந்திய அளவில் புகழ் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என திரையுலகினர் கருதுகின்றனர்.

Tags:    

Similar News